Skip to main content

பழைய நிழற்படங்கள்

 கட்டுரை

 

      தகப்பனார் திரு. எஸ். மாதவனின் பள்ளி வகுப்புப் படம், சிகாமட் ஜொகூர் 1940க்களில்



எம். பிரபு

 

சிறுபிராயத்தில் இருந்தே எனக்கு பழைய நிழற்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் மிகுதி. எங்கள் வீட்டில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் அவர்களின் ஆல்பங்களை அப்போதிலிருந்தே பார்த்துக் கொண்டு வருவதால், இந்த ஆர்வம் பிறந்தது எனலாம். அதுவும் கறுப்பு வெள்ளைப் நிழற்படங்கள் என்றால் அலாதி ஆர்வம்.

வீட்டில் உள்ள ஆல்பங்களின் படங்கள், 1940 -ஆம் ஆண்டுகளின் மத்தியில் முதற்கொண்டு எடுத்தப் படங்களாக இருக்கும். அந்தப் படங்களை எடுத்தவர் என் தகப்பனாரின் உறவுக்காரர்  என்று மட்டும்  தெரியும் ஆனால் அவர் யார் என்று இதுவரையில் எனக்குத் தெரியாது.

இதைத் தவிர்த்து 1950-ஆம் 1960-ஆம் ஆண்டுகளில் எங்கள் உறவினர்கள் ஸ்டூடியோவில் பிடித்த நிழற்படங்களும் எங்கள் வீட்டு ஆல்பங்களை நிரம்பியிருக்கும். பெரும்பாலான கருப்பு வெள்ளைப் படங்கள் பல வித அளவு கொண்ட பிரிண்ட்டுகளில் போடப்பட்டிருக்கும். ஒரு முழு ஆல்பம்  அளவு முதற்கொண்டு, சுண்டு விரல் அளவு வரைக்கும் படங்கள் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்.

படங்கள் எப்போது பிடிக்கப்பட்டதற்கான அடையாளமாக, அதன் பின் பக்கம் எங்கள் தகப்பனார் படம் பிடித்த தேதியை குறித்து வைத்திருப்பார். அல்லது வேறு யாராவது அவருக்கு எழுதி அனுப்பி வைத்திருப்பார்கள். 

பெரும்பாலான படங்கள் ஜொகூர் சிகாமட்டில் எடுக்கப்பட்டவையாகும். அப்போதையவர்களின் தோற்றமே மிகவும் வித்தியாச வித்தியசமாய் இருக்கும். குறிப்பாக உடைகள் மற்றும் தலைமுடி ஸ்டையில் இப்போதுள்ளதை ஓப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமாக இருக்கும். அவற்றை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

1960-ஆம் ஆண்டு மத்தியில் மற்றும் 1970க்களில் எங்கள் மாமா அதாவது அம்மாவின் தம்பி திரு. நோவா சம்பந்தன் ஜோகூர் லாபீஸில் நிறைய படங்களைப் பிடிக்கலானார். எங்கள் பெற்றோரின் பரிசம் மற்றும் திருமணப் படங்களை அவர்தான் படம் பிடித்தார் என்று பிறகுதான் அறிந்தேன். எனது சிறுவயது பல நிழற் படங்களையும் அவர்தான் பிடித்தார். அவர் படம் பிடிக்கும் விதமே தனி விதமாக இருக்கும்.

       பெற்றோரின் நிச்சயதார்த்தம் ஜொகூர் லாபிஸ் எஸ்டேட் 31/8/1963


பழைய நிழற்படங்களை சில பேர் கவர்கூடுகளில் போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவற்றை ஆல்பத்தில் அழகாக ஒட்டி வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

பழைய நிழற்படங்களைப் பார்ப்பதினால் என்னுள் ஏற்படும் பலவித மாற்றங்களை நான் விவரிக்க விரும்புகின்றேன்.

ஒவ்வொரு தடவையும் அவற்றைப் பார்க்கும் போதும் என்னால் அப்படம் எடுத்த காலத்திற்கு சென்று வர இயலும். அக்காலத்தில் பிறந்திருக்காவிட்டாலும், 1950 ஆண்டுகளுக்கு மத்தியில் நானே அந்த இடத்தில் நின்றுக் கொண்டிருப்பதாக கற்பனை செய்ய இயலும்.

நான் இருக்கும் படங்களோ அல்லது நான் கலந்துக் கொண்ட நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படங்களாக இருந்தால், அந்த அனுபவும் இன்னும் நிஜமாக மனதில் தோன்றும். கால இயந்திரம் அல்லாமலே என்னால் சில நிமிடங்களுக்கு படம் எடுத்த இடங்களுக்கும் அந்தக் காலகட்டத்திற்கும் மீண்டும் சென்று வர இயலும்.

இந்த அனுபவங்களை நான் மட்டுமே இவ்வாறு அனுபவிக்கின்றேனா அல்லது பிறரும் இவ்வாறு அனுபவிக்கின்றார்களா என்பதை தேடிப்பார்த்த போது பல விசயங்கள் புலப்பட்டது.

பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவது மிகவும் இயல்பான உணர்வாம். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வு இருக்காதாம்.

ஒரு பழைய புகைப்படத்தைப் பார்க்கும்போது, நாம் வெறும் ஒரு படத்தை மட்டும் பார்ப்பதில்லை. அந்தப் படத்துடன் சேர்ந்த பழைய காலம், மனிதர்கள், இடங்கள், சம்பவங்கள், நம் வயது, நம் வாழ்க்கை எல்லாம் மனதில் மீண்டும் தோன்றுகின்றனவாம்.

உதாரணமாக, 30 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தால்

“அப்போது நான் இப்படித்தானே இருந்தேன்!”

“இவர் இப்போது இல்லையே!”

“அந்த இடம் இப்போது எப்படி மாறிவிட்டது!”

“அந்தக் காலம் திரும்ப வராதா?”

“எவ்வளவு சீக்கிரம் காலம் போய்விட்டது!”

 என்றெல்லாம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பாம். 

இதற்கு nostalgia (நாஸ்டால்ஜியா) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் இதை “பழைய நினைவுகளின் ஏக்கம்” அல்லது “கடந்த கால நினைவின் உணர்வு” என்று சொல்லலாம்.

சில நேரங்களில் பழைய புகைப்படம் நம்மை சந்தோஷப்படுத்தும். சில நேரங்களில் வருத்தப்படுத்தும். சில சமயம் இரண்டும் சேர்ந்த உணர்வாக இருக்கும்.

எல்லோருக்கும் இப்படித்தான் இருக்குமா என்றால், இல்லை என்று ஆய்வு கூறுகின்றது.

Henri Cartier-Bresson என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் புகைப்படம் என்பது ஒரு கணத்தைப் பிடிப்பது மட்டுமல்ல; ஒரு வாழ்க்கையின் உண்மையை அந்தக் கணத்தில் பதிவு செய்கின்றது என்கின்றார்.

                                   Henri Cartier-Bresson

Ansel Adams, இயற்கைக் காட்சிகளுக்குப் புகழ்பெற்ற அமெரிக்க புகைப்படக் கலைஞர், புகைப்படத்தை வெறும் “கேமராவில் பதிவு செய்வது” என்று பார்க்கவில்லை. புகைப்படம் என்பது புகைப்படக் கலைஞரின் உணர்வையும் பார்வையையும் வெளிப்படுத்துவது என்று கருதினார்.

Susan Sontag புகைப்படங்களைப் பற்றி எழுதியபோது, புகைப்படம் என்பது ஒரு காலத்தில் நடந்த விஷயம் உண்மையிலேயே இருந்தது என்பதற்கான ஒரு சாட்சி போன்றது என்று சிந்தித்தார். அதனால்தான் பழைய புகைப்படம் சில நேரங்களில் நம்மை ஆழமாகத் தாக்குகிறது.

ஒரு பழைய புகைப்படம் நமக்கு சொல்லும் மிகப் பெரிய உண்மை இதுதான்:

“இந்தக் கணம் ஒருகாலத்தில் உண்மையாக இருந்தது. ஆனால் இப்போது அது நினைவாக மட்டுமே இருக்கிறது.”

அதனால்தான் சில பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது, நாம் புகைப்படத்தைப் பார்க்கவில்லை; நம்முடைய கடந்த காலத்தையே பார்க்கிறோம் என்று இவர்களின் சிந்தனைகள் நமக்கு கூறுகின்றன.

புகழ்பெற்ற உளவியலாளர் Gordon Allport, மனிதர்களின் தனிப்பட்ட நினைவுகளும் வாழ்க்கை அனுபவங்களும் அவர்களின் ஆளுமையை உருவாக்குகின்றன என்று கூறினார்.

Erik Erikson மனித வாழ்க்கை பல கட்டங்களாக மாறுகிறது என்று விளக்கியவர்.

வயது அதிகரிக்கும்போது ஒருவர் தன்னுடைய கடந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தொடங்குகிறார். பழைய புகைப்படங்கள் இந்த நினைவுகளைத் தூண்டலாம்.

அப்போது:

“நான் எப்படி இருந்தேன்?”
“என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது?”
“என்னென்ன நடந்துவிட்டது?”

என்ற எண்ணங்கள் வரலாம் என்கின்றார்.

நினைவாற்றல் குறித்து மிகவும் பிரபலமான உளவியலாளர் Elizabeth Loftus. அவருடைய ஆய்வுகள், நமது நினைவுகள் ஒரு வீடியோ பதிவு போல அப்படியே பாதுகாக்கப்படுவதில்லை என்பதை காட்டுகின்றன.

பழைய புகைப்படத்தைப் பார்க்கும்போது, அந்த நிகழ்வைப் பற்றிய நமது நினைவு மீண்டும் உருவாக்கப்படலாம்.

அதனால்தான் சில சமயம்:

“இந்த சம்பவம் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது!”

என்று நாம் நினைத்தாலும், அந்த நினைவில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

நாஸ்டால்ஜியா (nostalgia) பற்றி ஆய்வு செய்த உளவியலாளர் Clay Routledge, பழைய நினைவுகளை நினைப்பது வெறும் சோகமான அனுபவம் அல்ல என்று கூறுகிறார்.

சில நேரங்களில் nostalgia நமக்கு:

மகிழ்ச்சி

வாழ்க்கைக்கு அர்த்தம்

மற்றவர்களுடன் தொடர்பு

“நான் யார்?” என்ற உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.

பழைய புகைப்படம் = பழைய நினைவு + பழைய மனிதர்கள் + பழைய நம்முடைய வாழ்க்கை.

அதனால்தான் ஒரு 30 அல்லது 40 வருடங்கள் பழைய புகைப்படத்தைப் பார்க்கும்போது, சில வினாடிகளில் நமது மனம் பல வருடங்கள் பின்னால் சென்று விடுகிறது.

சில நேரங்களில் நாம் சிரிப்போம்.
சில நேரங்களில் கண்களில் கண்ணீர் வரும்.
சில நேரங்களில் இரண்டும் ஒன்றாக இருக்கும்.

இது விசித்திரமான உணர்வு அல்ல. மனித நினைவின் இயல்பான ஒரு பகுதி என்று உளவியளாலர்கள் அவர்களின் ஆய்வுகளின்படி விளக்குகின்றனர்.

ஆக. இதிலிருந்து நமக்கு என்ன தெரியவருகிறதென்றால் எல்லா பழைய படங்களும் நமக்கு பொக்கிஷங்களாகும். அதனை முறையாக ஆல்பத்தில் ஒழுங்குப்படுத்துவதினாலும்,  டிஜிட்டலில் பதிவிறக்கம் செய்து வைப்பதினாலும் தலைமுறை தலைமுறையாக எல்லோராலும் பார்வையிட்டு பயனடைய முடியும்.

 

                        

வீட்டில் உள்ள பழைய ஆல்பங்கலில் ஒன்று

     

Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...