Skip to main content

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

 அனுபவம் 

 

 


எம். பிரபு

 

நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.  என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள் National Union of Plantation Workers (தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும் அவர் மற்றும் ஓட்டுநர்  திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot 404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்கச் சந்தாவை வசூலிப்பதோடு தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை.

இந்த மாதச்  சந்தா, தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர், தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது உடன் செல்வோம். ரப்பர்த் தோட்டக் காட்டுக்குள் செல்வது பிடித்தமானதும் கூட. ரப்பர் மரங்களின் நடுவே அந்த டீசல் காரில் பயணிப்பதே அலாதி இன்பம். 

ரவுப் அருகிலுள்ள ச்சீரோ தோட்டத்தில் திரு. கோபாலன் நாயர் அவர்கள் NUPW பிரதிநிதியாக இருந்தார். அப்போதெல்லாம் அவர்களின் பச்சை நிற பலகை வீட்டிற்குச் சென்று, திருமதி தேவகி கோபாலன் தயாரித்த சுவையான தேநீரை  அருந்துவோம். பிறகு அவர்களது குடும்பம் பெல்டா லூரா பீலூட்டிற்கு மாற்றலாகி வந்த போது, மணிமேகலை மற்றும் அவர்களின் தாயார் பெந்தோங்கில் எங்கள் வீட்டிற்கும் அவ்வப்போது வந்துச் செல்வார்கள்.  மணிமேகலையும் எங்கள் வீட்டில் மூன்று வருடங்கள் தங்கியுள்ளார்.

1980களின் மத்தியில் திரு. கோபாலன் மறைந்தபின், அவர்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. 2010ஆம் ஆண்டு மீண்டும் மணிமேகலையைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் கிள்ளானில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒருவர் டஸ்னா உண்ணிகிருஷ்ணன். அவர் உயிரிணு நுண்மருந்தியல் நிபுணராக Senior Microbiologist பணியாற்றுகிறார்.

2020ஆம் ஆண்டு பினாங்கைச் சேர்ந்த திரு. மதன் அவர்களை கரம் பிடித்தார் டஸ்னா.  பின் அவர்களுக்கு நீய்ஹா மதன் என்ற அழகான மகள் பிறந்தாள். தற்போது அவளுக்கு நான்கு வயது ஆகின்றது. அவள் அழகும் ஆர்வமும் உடையவள். காணும் அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவளிடம் உள்ளது.

சமீபத்தில் நீய்ஹா பல சர்வதேச சாதனைகளைப் படைத்து சான்றிதழ்களும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இதனால் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றனர். 

டஸ்னா தன் மகளைப் பற்றி கூறியதாவது:

எங்கள் மகள் நீய்ஹா இத்தகைய இளம் வயதிலேயே உலக சாதனைப் புத்தகம் (இங்கிலாந்து), சர்வதேச சாதனைப் புத்தகம் (இந்தியா) மற்றும் கலாம் உலக சாதனை (இந்தியா) ஆகியவற்றில் தனது அபாரமான அறிவாற்றலை வெளிப்படுத்தி சாதனை புரிந்திருப்பது எங்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
அவள் திறமையுடன் மட்டுமல்லாமல், கருணையும் அன்பும் கொண்டவள். அதுவே எங்களை மிகவும் பெருமைப்படச் செய்கிறது.
அவளை  ஈன்ற நொடியிலேயே ஒரு பெரிய பயணம் தொடங்கப்போகிறது என்று உணர்ந்தேன்.
எங்கள் மகளின் இன்றைய சாதனையை கண்டு எங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது.
உலக சாதனைப் புத்தகம், லண்டன் மற்றும் அதன் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஸ்ரீவாஸ்தவ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
சர்வதேச சாதனைப் புத்தகம் (இந்தியா) மற்றும் கலாம் உலக சாதனை (இந்தியா) அமைப்புகளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.”

மேலும், நீய்ஹாவிற்கு எல்லா விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருக்கும் தன் தாயார் மணிமேகலை மற்றும் தந்தை உண்ணிகிருஷ்ணன் அவர்களுக்கு டஸ்னா நன்றி செலுத்த  கடமைப் பெற்றுள்ளதாவும் கூறினார்.

நீய்ஹாவின் சாதனைகளின் விவரங்கள்

World Book of Records (இங்கிலாந்து) 

1 வயது  4 மாதங்களில்

 “Apple to Zebra” என்ற எழுத்து வரிசையை 34 விநாடிகளில் சொன்னாள்

 International Book of Records (இந்தியா)

2 வருடம் 4 மாத வயதில்:·

 ஆங்கில எழுத்துக்கள்·

 எண்கள் 

ஒலி அடிப்படையிலான எழுத்துப் பயிற்சி

பாடல்கள்

 விலங்குகள் 

காய்கறிகள் 

பழங்கள்

மலர்கள்

ண்டின் மாதங்கள் 

வாரத்தின் நாட்கள்

வடிவங்கள் 

காலங்கள் 

எதிர்ச்சொற்கள்

ணர்வுகள் 

உடல் உறுப்புகள் 

பொருட்கள்

10 திருக்குறள்

ஆத்திச்சூடி

பக்திப் பாடல்கள்



Kalam's World Records (India organization) 

2 வயது 6 மாதங்களில்

110 விலங்குகள் மற்றும் பறவைகளை அடையாளம் கண்டு கூறியது

8 நிமிடம் 29 விநாடிகளில் நிறைவு செய்தாள்

3 வயது 9 மாதங்களில்

அதாவது, அண்மையில் நீய்ஹா மீண்டும் சாதித்திருக்கின்றாள். 5 நிமிடங்களில் 32 திருக்குறள்கள் கூறியதற்காக International Book of Records மூலம் Super Talented Kid விருது வழங்கியுள்ளதுடன்  One In A Million பட்டத்தையும்  வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளார்.  

நீய்ஹாவிற்கு எதையும் தெரிந்துக் கொள்ள ஆர்வம் அதிகம் உண்டு. சுயமாக மிருகங்களையும் மனிதர்களைக் கொண்டு கதைச் சொல்லும் திறனை நேரில் கண்டு கழித்து மிகவும் மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நானும் அவள் சொல்லும் கதைகளின் கதாப்பாத்திரமாக மாறி நடித்துக் காண்பிப்பது வழக்கமான ஒன்று. அவ்வப்போது அவளுக்கு கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதுமுண்டு. 

இவ்வளவு சிறிய வயதிலேயே நீய்ஹா மதன் அடைந்துள்ள சாதனைகள் உண்மையிலேயே வியப்பூட்டுகின்றன. அவளுடைய நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் கற்றலுக்கான ஆர்வம் பாராட்டத்தக்கது. இவை யாவும் அவளுடைய  வளர்ப்பு முறையே ஆகும் என நான் அறிவேன். மேலும் அவளது விடாமுயற்சியும் ஒரு காரணமாகும்.

நீய்ஹா மதன் எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை எட்டிப் புகழுடன் விளங்க வாழ்த்துவோமாக. அவளுடைய வாழ்க்கைப் பயணம் அறிவு, அன்பு மற்றும் வெற்றிகள் நிரம்பியதாக இருக்கட்டும். Top of Form

 

Bottom of Form

 


Comments

Post a Comment

Popular posts from this blog

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

கடைசியாகக் காணப்பட்டது

    சிறுகதை    எம். பிரபு   இன்று காலையும் எப்போதும் போல புலனத்தில் காலை வணக்கம் தகவல் போட்டப் பிறகு அப்பா பேசினார், நானும் பேசினேன். “ இந்த மாசம் எப்போ வீட்டுக்கு வர்றே ?” “ இன்னும் சரியா தெரியலப்பா.” “ மத்தவங்களுக்கு எல்லாம் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கொடுக்கிறாங்க ; உனக்கு மட்டும் ஏன் விடுப்பு கிடையாது ?” “ என் வேலை மத்தவங்க மாதிரி இல்லப்பா.” “ நல்லா சம்பளம் கொடுத்தா மட்டும் போதுமா ? விடுப்பெல்லாம் ஒழுங்குமுறையா கொடுக்குறது இல்லையா ? நீயும் உன் வேலையும்! சரி , வரப்ப திடுதிப்புன்னு வந்து நிக்காதே. ஒழுங்கா ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டு வா!” “ என் வேலை எப்போ ஆரம்பிக்கும் , எப்போ முடியும் என்று தெரியாதுப்பா.” “ நல்லா படிச்சிருந்தும் ஏன்தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தியோ ? மேல் படிப்பு படிக்கச் சொன்னா அதுவும் செய்யல. சரி... சரி , எனக்கு சமைக்கிற வேலை இருக்கு. நான் போனை வெச்சிடுறேன்.”   அப்பாவுக்கு நான் ஆசிரியர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது கனவு. என் தாயார் தமிழ்ப் பள்ளி ஆசிரியையாக இருந்ததால் அந்த ஆசை அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப...