சிறுகதை நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தை முறையாக பேணிக் காக்கப்படா விட்டால் ... எம். பிரபு இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானதாகும். கவின் வெறுமனே நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர் யாருடனும் சமரசமாகப் போகப்போவதும் இல்லை. அதற்குத்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அவர் செத்தாலும் சரி , தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என உறுதியுடன் இருந்தார். கருப்பு சூட் அணிந்துகொண்டு தங்கும் விடுதி அறையை விட்டு படிக்கட்டின் வழியே லோபி க்கு இறங்கினார். கையில் ப்ரீஃப்கேஸ் . மின் தூக்கியை உபயோகிக்க விரும்பவில்லை. அதுதான் பாதுகாப்பானது என எண்ணினார். எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவரது வழக்கம். அவரது உயிர் அவர் குடும்பத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல ; மாறாக , அவர் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் உரித்தானதாகும். இவ்வளவு காலமாகத் தொலைத்ததை மீட்டெடுக்கும் பணி கவின் கையில்தான் உள்ளது. அவரையே தொலைத்துவிட்டால் , பிறகு யார் அவரது இலட்சியத்தைத் தொடர்ந்து ஏற்று நடத்துவது ? அவரது எல்லாத் திட்டங்களும் வீணாகிவிடும்....