சிறுகதை எம். பிரபு என் கழுத்தில் தாலி என்ற அந்த மஞ்சள் கயிறு அழகாக மெல்ல வந்து அமர்ந்தது . அந்த மஞ்சள் கயிறு என் கழுத்தை அலங்கேறிய தருணம் என் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தக் கண்ணீர் விட்டேன். அவ்வளவு சந்தோசம். என் பெற்றோர் , உடன் பிறந்தவர்கள் , உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் புடைசூழ நின்று வாழ்த்து தெரிவித்து மஞ்சள் அரிசி , மலர்கள் தூவி மனதார வாழ்த்தினர். மொய்யும் இட்டனர். எவ்வளவு மகிழ்ச்சியான நாள் அது. மறக்க முடியாத நாள். ஆனந்த நாள். அற்புத நாள். அன்று எல்லா தெய்வங்களும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்த திருநாளா...