Skip to main content

மனிதனும் பிரச்சனைகளும்

கட்டுரை


              




             


எம். பிரபு

 


மனிதனாக இந்த பூமியில் பிறந்து விட்டோம். பலவித இனங்களாக, மதங்களாக பற்பல நாடுகளில்-கண்டங்களில் பலவித பரிணாமங்கள் எடுத்து, இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப மனித ரூபத்தில் காட்சியளிக்கின்றோம்.



மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் சுகபோக வாழ்க்கை அமைந்து விடாது. யாவரும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து அனுபவித்தே இந்த பூமியில் வாழ்ந்து பிறகு மடிந்து போகின்றனர்/வோம். இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.



மனிதனுக்கு அடிப்படைத் தேவை-உணவு, நீர், உடை, இருக்க இடம், கல்வி, நோய் இல்லா வாழ்வு, அரவணைக்க உற்றார் உறவினர் மற்றும் நல்ல நண்பர்கள். இவை இருந்தால்தான் வாழ்க்கை சிறந்து விளங்கும். ஆனால் இந்த அடிப்படை தேவைகள் கூட இல்லாத மனிதர்களும் இன்னமும் இவ்வுலகில் பெருமளவில் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதை அறிந்தும் அறியாதது போன்று வேறு பகுதியில் மனித இனம் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. இது இயற்கையே. சொந்த வாழ்க்கையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் போது பிறநாட்டு பிரச்சனைகளை நம் தலையில் தாங்கிக் கொள்ளும் சக்தி நம்மிடம் இல்லை.



யாரும் சரிசமமாக எங்கும் வாழ்ந்திடவில்லை. ஏற்றத் தாழ்வு இருந்தால்தான் வாழ்க்கை ருசிப்படும். நேர் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணம் போர் அடித்து விடுமல்லவா.


என்னதான் மனிதனை கடவுள் படைத்தான் என்று கருதப்பட்டாலும், மனிதன் இல்லாவிடில் கடவுள் என்ற ஒன்று இல்லாமல் போயிருக்கும். கடவுளும் மனிதனும் இப்புவியை இத்தனை கோடி ஆண்டுகளாக இயங்கச் செய்துள்ளனர். நல்லதோ கெட்டதோ, அனைத்து சம்பவங்களும் மனிதனுக்கும் கடவுளுக்கும் சம பங்குண்டு.



கடவுள் இருப்பதாகத் தோன்றினாலும் பல சமயம் இல்லாதது போன்றும் நமக்கு தோன்றும். கடவுள் இல்லாது போன்று தோன்றினால்தான் கடவுளைப் பற்றிய சிந்தனை மனிதனுக்கு அதிகம் உண்டாகும்.

ஒரு மனிதன் சிறந்த மனிதனாக ஆக முடியாவிட்டாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்து விட்டுப் போவதே சிறப்பாகும்.


உதாரணத்திற்கு, நம் நாட்டு இலக்கியவாதி திரு. A. Samad Said தனது படைப்புகளில்—குறிப்பாக Hujan Pagi நாவல் மூலம் தனது வாசகர்களுக்கு மனிதனைப் பற்றி ஆழமான செய்தியை வழங்கியுள்ளார்.

மனிதன் எந்த சூழலிலும் உண்மை (truth) மற்றும் நெறி (principles)யை விடக்கூடாது. வாழ்க்கையில் பணம், அதிகாரம், அரசியல் அழுத்தம் போன்றவை வந்தாலும், மனச்சாட்சி முக்கியம் என்பதையே அவர் வலியுறுத்துகிறார். உண்மையைப் பேசுவது சுலபமல்ல, ஆனால் அதுவே மனிதனின் மதிப்பை நிர்ணயிக்கிறது.



மனித வாழ்க்கை மாற்றங்களால் நிரம்பியுள்ளது; ஆனால் அந்த மாற்றங்களை சமாளிக்கும்போது மனிதநேயம் மறக்கப்படக்கூடாது. சமூகப் பொறுப்பு, அன்பு, மனித உணர்வு ஆகியவை இல்லாத முன்னேற்றம் வெறும் வெற்றியாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

“உண்மை, மனிதநேயம், பொறுப்பு—இவை இல்லாமல் வாழும் வாழ்க்கை முழுமையானதல்ல” என்பதே A. Samad Said தனது வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் முக்கியச் செய்தி.


அதேபோன்று Tunku Abdul Rahman மற்றும் Lee Kuan Yew இருவரும் மனித உறவுகள் மற்றும் சமூக ஒற்றுமை பற்றி வலுவான கருத்துகளை கொண்டிருந்தனர். 


Tunku Abdul Rahman அவர்கள் மனிதர்கள் இன, மத, மொழி வேறுபாடுகளை விட “நாம் அனைவரும் ஒரே மனிதர்கள், ஒரே நாட்டின் மக்கள்” என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரின் கருத்தில், அன்பு, புரிதல் மற்றும் ஒற்றுமை இருந்தால் மட்டுமே ஒரு நாடு அமைதியாக வளர முடியும்.



அதேபோல் Lee Kuan Yew அவர்கள் மனித உறவுகளில் ஒழுக்கம், கடுமையான உழைப்பு மற்றும் தேசிய ஒற்றுமையை முக்கியமாகக் கண்டார். அவர் பல இன மக்கள் ஒரே அடையாளத்தில் இணைந்து, கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் நாட்டை வளர்க்க வேண்டும் என்று கூறினார். இருவரின் கருத்துகளும் வேறுபட்ட முறையில் இருந்தாலும், அடிப்படை நோக்கம் ஒன்றே—மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து, ஒற்றுமையுடன் வாழ்ந்தால் சமூகம் வலுவாகவும் முன்னேற்றமாகவும் இருக்கும் என்பதாகும்.


பல சான்றோர்கள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று எடுத்துரைத்துவிட்டுச் சென்றாலும், மனிதாகிய நாம்தான் அவ்வாறு வழிநடத்திச் செல்ல வேண்டும். தடம்மாறிச் செல்லும் போதுதான் பற்பல பிரச்சனைகள் எழுகின்றின.


பிரச்சனைகள் எழலாம் ஆனால் அவற்றை சுமுகமாக தீர்ப்பது நம் கையில்தான் உள்ளது. கடவுள் வந்து தீர்த்து வைக்கமாட்டார்.


நல்லதோ கெட்டதோ எல்லாம் நமது கையில்.









Comments

Popular posts from this blog

பழைய நிழற்படங்கள்

  கட்டுரை          தகப்பனார் திரு. எஸ். மாதவனின்  பள்ளி வகுப்புப் படம் , சிகாமட் ஜொகூர் 1940க்களில் எம். பிரபு   சிறுபிராயத்தில் இருந்தே எனக்கு பழைய நிழற்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் மிகுதி. எங்கள் வீட்டில் எங்கள் தகப்பனார் திரு. எஸ். மாதவன் அவர்களின் ஆல்பங்களை அப்போதிலிருந்தே பார்த்துக் கொண்டு வருவதால் , இந்த ஆர்வம் பிறந்தது எனலாம். அதுவும் கறுப்பு வெள்ளைப் நிழற்படங்கள் என்றால் அலாதி ஆர்வம். வீட்டில் உள்ள ஆல்பங்களின் படங்கள் , 1940 -ஆம் ஆண்டுகளின் மத்தியில் முதற்கொண்டு எடுத்தப் படங்களாக இருக்கும். அந்தப் படங்களை எடுத்தவர் என் தகப்பனாரின் உறவுக்காரர்   என்று மட்டும்   தெரியும் ஆனால் அவர் யார் என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. இதைத் தவிர்த்து 1950-ஆம் 1960-ஆம் ஆண்டுகளில் எங்கள் உறவினர்கள் ஸ்டூடியோவில் பிடித்த நிழற்படங்களும் எங்கள் வீட்டு ஆல்பங்களை நிரம்பியிருக்கும். பெரும்பாலான கருப்பு வெள்ளைப் படங்கள் பல வித அளவு கொண்ட பிரிண்ட்டுகளில் போடப்பட்டிருக்கும் . ஒரு முழு ஆல்பம்  அளவு முதற்கொண்டு , சுண்டு விரல் அளவு வரைக்கும் படங்...

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

முருகனே துணை

  சிறுகதை   எம். பிரபு       இத்தனை காலமாக நான் வணங்கி வந்த அந்த முருகப் பெருமான் மெல்ல மெல்ல என்னை கை விட்டு விட்டதாக அப்போது உணர்ந்தேன். நான் ஒரு தவறும் செய்யவில்லையே, இருந்தும் அண்மைய காலமாக ஏன் என்னை சோதனை மேல் சோதனை செய்கின்றான் அந்த முருகன். நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன்? வாரம் தவறாமல் அவன் சன்னிதிக்குச் சென்று, அவன் பெயரிலேயே அர்ச்சனை செய்கின்றேனே. நெய் தீபம் ஏந்தி கோவிலை வலம் வருவேனே. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அர்ச்சகருக்கும் கோயில் உண்டியலிலும் என்னால் முடிந்த அளவுக்கு காணிக்கை செலுத்துவேனே. உனக்கு என்ன குறை வைத்தேன் முருகா? சொல் முருகா! சிறு வயதிலிருந்தே என் அப்பன் முருகன் என்னைக் கைவிட்டதே இல்லை. என்ன பிரச்சனை வந்தாலும், அது அப்படியே பனி போன்று மறைந்துப் போகும். எனக்கே அது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும். எல்லாம் முருகனின் செயல் என்று நான் அறிவேன். இரண்டோ அல்லது மூன்று வயது இருக்கும் போதே எனக்கு முருகன் என்றால் அவ்வளவு பிரியம். கோவிலில் முருகன் சிலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. “ உனக்கு முருகன் வேஷம் போட்டா அழகா இருக்கும், ...