Skip to main content

புது முதலாளி

 சிறுகதை


 



எம். பிரபு

 

கிருஷ்ணா, கடையை கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!”

கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.

கிருஷ்ணா, அரிசி ரெண்டு கிலோ கட்டி வை!”

கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.

கிருஷ்ணா, இந்த பொருட்களோட விலையெல்லாம் கணக்கு செய்து வை!”

அப்போதும் கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.

கிருஷ்ணா, எனக்கு உடம்புக்கு முடியல. சாமான் எல்லாம் கட்டி வை.

கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.

தந்தை ஒரு வருடத்தில் இறந்தும் போனார். அப்போதுதான் கிருஷ்ணனுக்கு பயம் வந்தது. எப்படி தன்னையும், தன் தம்பி தங்கைகளையும் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்கிற பயம். அவன் தலை மேல் பெரும் பாரம். 

கித்தா மரம் வெட்டுவதா? அது அவனுக்குப் பிடிக்காதே. அதில் பயிற்சியும் இல்லை. தொழிற்சாலையில் வேலை செய்வதா? தோட்டத்தை விட்டு வெகு தொலைவு போக வேண்டும்.

இறுதியாக அப்பாவுடைய இந்த மளிகைக் கடையை தொடர்ந்து வழி நடத்துவதுதான் சரியெனப்பட்டது. வேறு வழி இல்லை. அப்பாவுடைய ஒரே சொத்து.

சொந்தக்காரர்களை எதிர்ப்பார்க்கலாம் என்றால், அவர்கள் தன் பெற்றோரை பகைத்துக் கொண்டவர்களாயிற்றே. ஏதோ சாதி பிரச்சனையாம். 

வியாபாரம் செய்வது உன் ஓவியங்களை தீட்டுவது போலத்தான். முதல்ல சிரமமாத்தான் இருக்கும். ஆனால், வரைந்து முடித்தப் பிறகு உன் மனசு எவ்வளவு மகிழ்ச்சியடையுது. உன்னால் நிச்சயம் வியாபாரம் செய்ய முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு, கிருஷ்ணா. புரியுதா?”

கிருஷ்ணன் அப்போது ஏதும் விளங்காமல் தலையசைத்தான். 

கிருஷ்ணன் இப்போது ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

அவனுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஒரு மனிலா அட்டையை எடுத்து மார்க்கர் பேனாவால் அழகாக எழுதத் தொடங்கினான்.

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு, வணக்கம். வரும் திங்கட்கிழமை மீண்டும் கடை திறக்கப்படும். பொருட்கள் ரொக்கமாக மட்டுமே விற்கப்படும். இனிமேல் கடனுக்கு பொருட்கள் கொடுக்கப்படாது. 

பழைய பாக்கி உள்ளவர்கள், கடனை அடைத்தப் பிறகு பொருட்கள் வாங்க அனுமதி உண்டு.

மன்னிக்கவும். 

நன்றி.

கிருஷ்ணா

 

இந்த அறிக்கையைப் பார்த்த தோட்டத்து மக்கள் அதிர்ச்சியுற்றனர். சிலர் பரிதாபப்பட்டனர். சின்னப் பையன் எப்படி வியாபாரம் செய்யப் போகிறான் என்றும் பேசிக் கொண்டனர்.

திங்கட்கிழமை கிருஷ்ணன் கடையைத் திறந்தான். என்னதான் கடையை அதிகாலையிலேயே அவன் திறந்தாலும், யாரும் அவன் கடைப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கிருஷ்ணன் வருத்தமடைந்தான். பதினோன்று மணியளவில் கடைப் பின்னால் இருக்கும் தன் வீட்டிற்குச் சென்று தனக்கு தெரிந்ததை சமைத்து வைத்தான். ஒன்றரை மணியளவில் தன் தம்பியும் தங்கையும் பள்ளியிலிருந்து வந்து விடுவார்கள்.

சமைத்து முடித்தப் பின் மீண்டும் கடையைத் திறந்தான்.

முதல் முதலாக காமாட்சி பாட்டி வந்தார். ஒரு சிறிய சார்டின் டின்னை வாங்கிச் சென்றார், ரொக்கமாக. கிருஷ்ணனுக்கு ஒரே குஷி. அதன் பிறகு சில இளைஞர்கள் சிகரேட் வாங்கிச் சென்றனர். கை காசு கொடுத்துதான் வாங்கினர். மேலும் சந்தோசம் அடைந்தான். சிலர் பொருட்களை கடனுக்கு கேட்டனர். அவர்களை திருப்பியனுப்பி விட்டான்.

மறு மாதம், முதல் வாரத்தில் பல வாடிக்கையாளர்கள் கடனை அடைத்தனர். கிருஷ்ணன் துள்ளிக் குதிக்காத குறைதான்.

ஏறக்குறைய மூன்று மாதங்களில் பெரும்பாலோர் தத்தம் கடன்களை அடைத்து விட்டனர். அந்த பணத்தைக் கொண்டு ஏஜெண்டுகளின் கடன்களை அடைத்தான். இப்போதுதான் கிருஷ்ணன் முழு நிம்மதி அடைந்தான்.

தோட்டத்து மக்கள் கிருஷ்ணனை புது முதலாளிஎன்று அழைக்கத் தொடங்கினர். அது அவனுக்கு பிடித்திருந்தது. அதில் கிண்டலும்  நக்கலும் கலந்திருந்தாலும் அவனுக்கு பிடித்திருந்தது.

என்னதான் அவன் சந்தோசமாக இருந்தாலும், கடையில் வருமானம் மிகவும் குறைவாக கிடைத்தன. அவன் அப்பா பெரும்பாலான பொருட்களின் விலையை குறைந்த லாபத்திற்கே விற்று வந்துள்ளார். ஒரு ஆகச் சிறிய சார்டின் டின் 10 காசுக்கு மட்டுமே இலாபம் பெற முடிந்தது. இந்த மாதிரியே போய்க் கொண்டிருந்தால்  பணக்காரனாக வழி இல்லை என்று நன்கு அறிந்து  ...

 

முழுக் கதையை தொடர்ந்து வாசிக்க எனது தலைவர் சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படிக்க றவாதீர்கள்.

 

புத்தகத்தின் விலை  RM18 மட்டுமே (தபால் செலவு உட்பட)

தொடர்பு எண்கள் : 016 9612085





Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

கடைசியாகக் காணப்பட்டது

    சிறுகதை    எம். பிரபு   இன்று காலையும் எப்போதும் போல புலனத்தில் காலை வணக்கம் தகவல் போட்டப் பிறகு அப்பா பேசினார், நானும் பேசினேன். “ இந்த மாசம் எப்போ வீட்டுக்கு வர்றே ?” “ இன்னும் சரியா தெரியலப்பா.” “ மத்தவங்களுக்கு எல்லாம் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கொடுக்கிறாங்க ; உனக்கு மட்டும் ஏன் விடுப்பு கிடையாது ?” “ என் வேலை மத்தவங்க மாதிரி இல்லப்பா.” “ நல்லா சம்பளம் கொடுத்தா மட்டும் போதுமா ? விடுப்பெல்லாம் ஒழுங்குமுறையா கொடுக்குறது இல்லையா ? நீயும் உன் வேலையும்! சரி , வரப்ப திடுதிப்புன்னு வந்து நிக்காதே. ஒழுங்கா ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டு வா!” “ என் வேலை எப்போ ஆரம்பிக்கும் , எப்போ முடியும் என்று தெரியாதுப்பா.” “ நல்லா படிச்சிருந்தும் ஏன்தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தியோ ? மேல் படிப்பு படிக்கச் சொன்னா அதுவும் செய்யல. சரி... சரி , எனக்கு சமைக்கிற வேலை இருக்கு. நான் போனை வெச்சிடுறேன்.”   அப்பாவுக்கு நான் ஆசிரியர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது கனவு. என் தாயார் தமிழ்ப் பள்ளி ஆசிரியையாக இருந்ததால் அந்த ஆசை அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப...