சிறுகதை எம். பிரபு “மனோ , உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன் இ ந் த மாதிரி முட்டாள்த்தனமான காரியம்ல்லாம் செய்யாதேன்னு! உன் அண்ணன ப் பாரு , அவன் எங்கேயாச்சும் உம்மாதிரி நடந்துக்கறானா ?” என்னை ஏசி முடித்து ஒரு நொடியிலேயே என் இடது கண்ணத்தில் பலாரென்று இரண்டு அ றைகள் விழுந்த ன . என் கண்ணம் வலித்தது , என் மனதும் அதைவிட வலித்தது. என்னைக் கேட்காமலேயே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த ன . எவ்வளவு முயன்றும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. வீட்டை விட்டு பின் வாசல் வழி கொ ல்லை ப் புறத்துக்குச் சென்றேன். சத்தம் போட்டு அழவேண்டும் போல் தோன்றியது . ஆனால் அப்படிச் செய்தால் , அம்மா இன்னும் தீவிரமாகி , ரோத்தானால் என்னை அடித்துத் தீர்த்துவிடுவார். அதற்கு அ றை வாங்கியதே தேவலம். அம்மா சொன்னதற்கு நான் பதில் ஏதும் கூறவில்லை. அம்மா எப்போதும் அப்படித்தான். நான் எது செய்தாலும் குற்றம்தான். ஆனால் , அண்ணன் என்ன செய்தாலும் சரி. அது ஏன் என்று எனக்குப் புரிந்தும் புரியாத மாதிரி அழுதுக் கொண்டிருந்தேன். என்னைப் பற்றி எனக்குத் தெரியும் அதற்கு மேல் அம்மாவுக்கும...