கட்டுரை எம். பிரபு ஒரு வருடமல்ல , இரண்டு வருடமல்ல ; பல நூறு ஆண்டுகளாக நாம் இந்த மலேசியத் திருநாட்டில் பலவித இனங்களாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால் , நாட்டு மக்களின் ஒற்றுமை அல்லது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் இன்னமும் பின்தங்கியே உள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் ஒற்றுமையாக வாழ்வது போன்று காட்சியளித்தாலும் , உண்மையில் நாம் அப்படி வாழ்வதாக தெரியவில்லை. அதுவும் முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது நமது ஒற்றுமை மிகவும் வலுவிழந்துள்ளது. நாமும் மற்றவர்களும் ஓர் இனத்தைப் பற்றி குறை சொல்லாத நாட்கள் இருக்கின்றனவா ? கோப்பிக் கடைக்குச் சென்றால் பெரும்பாலானவர்கள் பிற இனத்தைப் பற்றி எதையாவது குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பது கண்கூடு. சமூக ஊடகங்களைப் பற்றி சொல்லத் தேவையே இல்லை. நேரில் மோதிக் கொள்ள வலுவும் தைரியமும் இல்லாததால் , எல்லோரும் அங்கு களம் இறங்கி கூச்சமில்லாமல் கண்டதையும் எழுதி , இனங்களுக்கிடையிலான பகைமையை வளர்த்து விடுகின்றனர். இதை எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் , கூத்தாடி சந்தோஷப்படுவது போன்று வெறுமனே இருக்கிறது. இதனால் ஏற்படப் போகு...