கட்டுரை எம். பிரபு நமது நாட்டில் இந்திய மாணவர்கள் பல மொழிசார்ந்த கல்வியை அவசியமாகப் பயில வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எந்த வகையான மொழிசார்ந்த பள்ளிக்கூடத்திற்கும் பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப பிள்ளைகளை அனுப்பலாம். தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதே சிறந்தது என்பதே அனைவரது விருப்பமாக இருந்தாலும் , அது நடைமுறையில் எப்போதும் சாத்தியமானதாக இருப்பதில்லை. மூலைக்கு மூலை மற்ற மொழிப் பள்ளிகள் இருப்பது போல் தமிழ்ப் பள்ளிகளும் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒருவருக்குத் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியமோ , அதேபோல் தமது தேசிய மொழியும் இந்நாட்டில் மிக முக்கியமானதாகும். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு குடிமகனுக்கு , தன் நாட்டின் மொழியைச் சரிவர பேசவும் எழுதவும் தெரியாவிட்டால் , அதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு மாணவர் எந்தப் பள்ளியில் பயின்றாலும் , அவன் அல்லது அவள் நிச்சயமாக தேசிய மொழியில் எழுதவும் பேசவும் புலமை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ பிறந்த ஒரு குழந்தை அங்குள்ள ஆங்கில மொழியைத்தான் தன் முதன்மையான மொ...