Skip to main content

தேசிய மொழியில் சிறந்து விளங்க வழிமுறைகள்

 கட்டுரை

 



 

 

எம். பிரபு

 

நமது நாட்டில் இந்திய மாணவர்கள் பல மொழிசார்ந்த கல்வியை அவசியமாகப் பயில வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எந்த வகையான மொழிசார்ந்த பள்ளிக்கூடத்திற்கும் பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப பிள்ளைகளை அனுப்பலாம்.

தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதே சிறந்தது என்பதே அனைவரது விருப்பமாக இருந்தாலும், அது நடைமுறையில் எப்போதும் சாத்தியமானதாக இருப்பதில்லை. மூலைக்கு மூலை மற்ற மொழிப் பள்ளிகள் இருப்பது போல் தமிழ்ப் பள்ளிகளும் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஒருவருக்குத் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தமது தேசிய மொழியும் இந்நாட்டில் மிக முக்கியமானதாகும். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு குடிமகனுக்கு, தன் நாட்டின் மொழியைச் சரிவர பேசவும் எழுதவும் தெரியாவிட்டால், அதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒரு மாணவர் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவன் அல்லது அவள் நிச்சயமாக தேசிய மொழியில் எழுதவும் பேசவும் புலமை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ பிறந்த ஒரு குழந்தை அங்குள்ள ஆங்கில மொழியைத்தான் தன் முதன்மையான மொழியாகக் கருதும். அதன் பின்னரே பிற மொழிகள் அனைத்தும். காரணம், ஆங்கிலமே அந்நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாகும்.

அதேபோல் நமது இந்திய மாணவர்களும் தேசிய மொழியை தமது சொந்த மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்நாட்டில் பிறந்ததற்கான முழுப் பயனை பெற்றதாகக் கூற முடியும்.

ஒரு மாணவர் தேசியப் பள்ளியில் பயின்றால்தான் தேசிய மொழியில் சிறந்து விளங்க முடியும் என்பது தவறான கருத்தாகும். எந்த மொழிப் பள்ளியில் பயின்றாலும், ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், எவ்வாறாயினும் அந்த மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற முடியும். எல்லாவற்றிற்கும் முயற்சி அவசியம். அதேபோல், மலாய் மாணவர்கள் அனைவரும் தேசிய மொழியில் புலமை பெற்றவர்களே என்றும் சொல்ல முடியாது.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தேசிய மொழியைப் பயிலுவதில் சற்று சிரமம் அடைகிறார்கள் என்ற கூற்று உண்மைதான். ஆனால் அந்தச் சிரமத்தைப் போக்க வழி தேடி செயலாற்ற வேண்டுமே தவிர, அதை மட்டும் பிடித்துக்கொண்டு குறை கூறிக் கொண்டிருந்தால் பயன் இல்லை.

முன்னர் நான் எழுதிய கட்டுரைகளிலும் குறிப்பிட்டதுபோல், ஒரு மாணவன் அல்லது மாணவி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு முழுக் காரணமும் பெற்றோர்களே. பெற்றோர் எந்த வகையில் தங்கள் பிள்ளைகளை வழிநடத்துகிறார்களோ, அதேபோல அவர்களின் வருங்கால வாழ்க்கையும் அமையும்.

இங்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வழிநடத்தினாலே போதுமானது.

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பே தேசிய மொழி சார்ந்த கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களுடன் பெற்றோர் அமர்ந்து படிக்க வேண்டும். 

லாய் மொழி பேசும் அண்டை அயலார் சிறுவர்களுடன் பழக அனுமதிக்க வேண்டும்.

மலாய் மக்களின் கலை, கலாச்சார மற்றும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைத்துச் செல்ல வேண்டும். 

வாரத்திற்கு ஒரு முறையாவது நூலகத்திற்கு அழைத்துச் சென்று, பல மணி நேரம் அங்கு பலவகை புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கலாம். அங்கிருந்து புத்தகங்களை இரவலாக வாங்கியும் வரலாம். 

படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டிலுள்ளவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கருத்துப் பரிமாற்றம் நடத்தலாம். 

படித்த புத்தகங்களின் விவரங்களை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். பிற்காலத்தில் கட்டுரை எழுதுவதற்கு அந்தக் குறிப்புகள் பெரிதும் உதவும். 

தேசிய மொழி புத்தகங்கள் படிப்பதோடு மட்டும் நிற்காமல், தொலைக்காட்சியிலும் யூடியூப்பிலும் ஒளிபரப்பாகும் மலாய் செய்திகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதும் கேட்பதும் மூலம் பிள்ளைகளின் பேச்சுத் திறன் மேலும் மேம்படும். 

பிறருடன் கூச்சமின்றி தேசிய மொழியில் உரையாட வேண்டும். தவறாகப் பேசினால் திருத்திக் கொள்ளவும், திருத்தம் செய்யவும் பழக வேண்டும். 

அதோடு, இந்திய எழுத்தாளர்கள் தேசிய மொழியில் எழுதிய படைப்புகளையும் மாணவர்கள் வாசிக்க வேண்டும். KAVYAN அமைப்பு இதற்காக அதிக முயற்சிகள் மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை வாங்கி ஆதரவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களையும் எழுத உற்சாகப்படுத்தலாம்.

இந்திய எழுத்தாளர்கள் தேசிய மொழியில் எழுதிய படைப்புகள்
https://ekavyan.blogspot.com என்ற இணையதளத்திலும் நிறைய உள்ளன. அங்கும் வாசிக்கலாம்.

ஆக, தேசிய மொழியை சரளமாக எழுதவும் பேசவும் பல வழிகள் உள்ளன என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உழைப்பு இல்லாமல் எதுவும் கிடைக்காது.

KAVYAN வெளியீடு செய்த புத்தகங்களைப் பெற விரும்புவோர், கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் விலைப்பட்டியல் வழங்கப்படும்.

 016 9612085    -  எம். மகேந்திரன்

 011 11411952   -  உதய சங்கர் எஸ். பி

 


Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...