குறுங்கதை எம். பிரபு இன்று இரவு அவன் கதையை முடிப்பதே சரி. நண்பனாக இருந்தவன் இப்போது துரோகியாக மாறி விட்டான். அவனுக்கெவ் வளவு செய்திருப்பேன். எதையுமே நினைத்துப் பார்க்காமல் என்கிட்டேயே தன் வேலையை காட்டி விட்டான். இதற்குத்தான் எவனையும் நம்பக்கூடாது . நயவஞ்சகன்! “ நிஜமாவா நீ இன்னிக்கி ராத்திரி அவனைப் போடப் போற ? ” கதிருக்கு என் செயல் மிகுந்த ஆச்சர்யத்தையும் பயத்தையும் கொடுத்தது. அவன் முகமே மாறியது. “ மெதுவா பேசு. இது வீடில்ல ... கடை. ஆமா , இன்னிக்கி ராத்திரி. ” “ அவன் நம்ம கூட்டாளியாச்சே. நீ எப்படி அவனை சந்தேகப்படலாம் ? ” கதிர் இப்போது என்னைப் போன்று மெதுவாகவே பேசினான் “ எனக்குத் தெரியும் அது அவனேதான். வேற யாரும் இதை செஞ்சிருக்க முடியாது. ” “ என்னால நம்பவே முடியில , சிவா. ” “ நீ நம்பித்தான் ஆகனும். ” “ இதுக்கு வேற வழியே இல்லையா ? ” கதிருக்கு முரளி ம...