Skip to main content

Posts

வாருங்கள் புத்தகம் வாசிப்போம்!

  கட்டுரை                                  எம். பிரபு   கடந்த சில ஆண்டுகளாக , நம் நாட்டில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை நாமும் நன்றாகவே அறிவோம்.   தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூ றி யதன்படி , மலேசிய தேசிய நூலகம் நடத்திய ஆய்வில் 57.7%  மலேசியர்கள் வாசிப்பை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட் டுள து. ஆனால் அவர்கள் உண்மையிலேயே புத்தகங்களைப் படிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.   என து  பார்வையில் , நம்மிடம் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை.   சிறியவயதிலிருந்து எழுத்துக்களை கற்றுக்கொள்கின்றோம் ,  ஆனால் வயது ஆக ஆக கற்றுக் கொண்டதை புறக்கணிக்கின்றோம்.   தண்டத்திற்குத்தானே பள்ளியில் அத்தனை வருடங்கள் பள்ளியில் பயின்றோம்?   மாற்றம் தேவை! மலேசியர்கள் வாசிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு குடிமகனும் , குழந்தை பருவத்திலிருந்தே புத்தகங்களை நேசிக்க வேண்டும். ஆனால் உண்ம...

மது

  கட்டுரை                                              எம். பிரபு   மனிதர்களும் மதுவும் பிரிக்க முடியாத ஒன்று போல ஆகிவிட்டது. இந்த உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் , மக்கள் மது அருந்துவதைத் தடுக்க முடியவில்லை. கூடுதலாக , இதற்காக யாரும் கவலைப்படுவதும் இல்லை. அவர்கள் மத போதனைகளை கடைபிடிக்கிறவர்களாக இருந்தாலும் , அல்லது மதுவால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தாலும் , மதுவைத் தொடுவதில் எந்த தயக்கமும் இருந்ததில்லை .   99 Speed Mart போன்ற கடைகளில் நிறைய   இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மதுபானங்களை வாங்குவதைக் காண்கிறேன். அவர்கள் மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைபோல் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவது   போன்றே   மது வாங்குவது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது.   மதுபானம் பல வகைகளில் கிடைக்கிறது. ஒயின் , விஸ்கி , பிராந்தி , பீர் , தோ டி , சம்சு , ரம் மற்றும் குறைந்த ஆல்கஹால் சதவீதம் கொண்ட ஷாண்டி போன்றவை இதில் அடங்கும். தற்போது...

ரம்பா ஊர்வசி மேனகா

  குறுங்கதை   எம். பிரபு         வித்வான் அறையின் கதவை மெதுவாகத் திறந்தேன். இந்தச் செயலுக்கு என்னைத் தூண்டும் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. வித்வான் பெரும்பாலும் நீண்ட நேரம் குளியலறையில் இரு ப்பார் . இ துதான் சரியான சந்தர்ப்பம் . அவர் அறையில்  எதையாவது கண்டுபிடிப்பேன் என்று நம்பினேன்.  தின மும் ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. அறையில் அவ ரு டையப் பொருட்கள் அதிகமில்லை. ஒரு பயணப்பை , நாதஸ்வரம் , மேசையில்  சில புத்தகங்கள் , பேனாக்கள் மற்றும்  பென்சில்கள்  இருந்தன . கதவின் பின்புறம் வண்ண மையமான  உடைகள் தொங்கியிருந்தன. நான் அவ ரு டைய பணப்பையை எடுத்தேன். ஏதாவது புகைப்படம் இருக்குமோ என்று   பார்க்கத்தான் . அந்த ப்  பணப்பையை முற்றிலும் பரிசோதித்தேன். வெறும் இந்திய , மலேசிய ரொக்கம்  மற்றும் சில ரசி து கள் மட்டுமே காணப்பட்டன.   பிறகு மேசையின் இழுவையைப் பார்த்தேன். . ரம்பா ,  ஊர்வசி, மேனகா. அது தான் எங்கள் பெயர்கள் ,  நாங்கள் மூன்று சகோதரிகள்.   பெயர்கள்   விசித்திரமாக இருக்கிறதல்லவா ?  எ...