கட்டுரை எம். பிரபு மனிதர்களும் மதுவும் பிரிக்க முடியாத ஒன்று போல ஆகிவிட்டது. இந்த உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் , மக்கள் மது அருந்துவதைத் தடுக்க முடியவில்லை. கூடுதலாக , இதற்காக யாரும் கவலைப்படுவதும் இல்லை. அவர்கள் மத போதனைகளை கடைபிடிக்கிறவர்களாக இருந்தாலும் , அல்லது மதுவால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தாலும் , மதுவைத் தொடுவதில் எந்த தயக்கமும் இருந்ததில்லை . 99 Speed Mart போன்ற கடைகளில் நிறைய இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மதுபானங்களை வாங்குவதைக் காண்கிறேன். அவர்கள் மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைபோல் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவது போன்றே மது வாங்குவது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. மதுபானம் பல வகைகளில் கிடைக்கிறது. ஒயின் , விஸ்கி , பிராந்தி , பீர் , தோ டி , சம்சு , ரம் மற்றும் குறைந்த ஆல்கஹால் சதவீதம் கொண்ட ஷாண்டி போன்றவை இதில் அடங்கும். தற்போது...