கட்டுரை எம். பிரபு நமது தேசிய மொழியான மலாய் மொழி தென்கிழக்கு ஆசியாவில் பேசப்படும் ஒரு ஆஸ்ட்ரோனேசிய மொழியாகும். இது குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா, புருனை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முக்கியமான மொழியாக விளங்குகின்றது. தற்போது மலாய் மொழி 300 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு முக்கிய மொழியாகும். இதன் மொழி வளர்ச்சி தொடர்ந்து நடந்துக் கொண்டு வருகின்றது - தொழில்நுட்பம், கல்வி, ஊடகம், இலக்கியம், இணையம் ஆகியவற்றின் வழியாக. இந்தியர்களும் சீனர்களும் எப்போது இந்த மலேசிய திருநாட்டிற்கு வந்தனரோ, அப்போதிலிருந்து அவர்கள் இவ்வழகிய மொழியை தேவை கருதி ஏற்றுக் கொண்டனர். மலாய்க்காரர்கள் அளவு பேசாவிட்டாலும், தினசரி உபயோகிக்கும் முக்கியமான வார்த்தைகள், கோர்வையாக பேச, புரிந்துக்கொள்ள கற்றுக் கொண்டனர். இந்த 2025 ஆண்டு வரையில் நம்மவர்கள் நிறைய பேர் தேசிய மொழியில் பாண்டியத்துவம் பெற்றுள்ளனர். இருப்பினும், இன்றளவும் இந்தியர்களும் சீனர்களும் 100% முழுமையாக இம்மொழியை தன்வசம் வைத்துக் கொள்ளவில்லையென்றே கூறலாம். இன்னமும் பல பேர் அதை அன்னிய மொழி என்றே கருதி வருகின்றனர். தற்ப...