Skip to main content

Posts

நம் மாணவர்களும் தேசிய மொழியும்

  கட்டுரை       எம். பிரபு   நமது தேசிய மொழியான மலாய் மொழி தென்கிழக்கு ஆசியாவில் பேசப்படும் ஒரு ஆஸ்ட்ரோனேசிய மொழியாகும்.   இது குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா, புருனை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முக்கியமான மொழியாக விளங்குகின்றது. தற்போது மலாய் மொழி 300 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு முக்கிய மொழியாகும். இதன் மொழி வளர்ச்சி தொடர்ந்து நடந்துக் கொண்டு வருகின்றது - தொழில்நுட்பம், கல்வி, ஊடகம், இலக்கியம், இணையம் ஆகியவற்றின் வழியாக. இந்தியர்களும் சீனர்களும் எப்போது இந்த மலேசிய திருநாட்டிற்கு வந்தனரோ, அப்போதிலிருந்து அவர்கள் இவ்வழகிய மொழியை தேவை கருதி ஏற்றுக் கொண்டனர். மலாய்க்காரர்கள் அளவு பேசாவிட்டாலும், தினசரி உபயோகிக்கும் முக்கியமான வார்த்தைகள், கோர்வையாக பேச, புரிந்துக்கொள்ள கற்றுக் கொண்டனர். இந்த 2025 ஆண்டு வரையில் நம்மவர்கள் நிறைய பேர் தேசிய மொழியில் பாண்டியத்துவம் பெற்றுள்ளனர். இருப்பினும், இன்றளவும் இந்தியர்களும் சீனர்களும் 100% முழுமையாக இம்மொழியை தன்வசம் வைத்துக் கொள்ளவில்லையென்றே கூறலாம். இன்னமும் பல பேர் அதை அன்னிய மொழி என்றே கருதி வருகின்றனர். தற்ப...

MEDIA 'SO' SIAL? : NYAWA DI HUJUNG PISAU

  Cerpen     Oleh: M. Mahendran     Nithya menekan butang nombor 8 setelah masuk ke dalam lif. Badannya yang berpeluh tadi terasa segar dengan penghawa dingin. Setiap hari pergi balik kerja menaiki pelbagai pengangkutan awam sungguh meletihkan. Sebab itu Nithya sentiasa gemar berbaju-T dan berseluar jeans sahaja - memudahkan pergerakannya. Dia menukar beg galas kecilnya dari bahu kanan ke bahu kiri. Tiga orang kanak-kanak yang masuk bersama tadi bergelak-ketawa membuat suasana riuh-rendah .  Nithya tidak gemar  keadaan begitu. Dia selalu nampak mereka   di kawasan pangsapuri ini, mungkin adik-beradik, tinggal di tingkat 16 - tingkat paling atas. Mereka selalu  memanggilnya ‘kakak’ dan dia hanya akan tersenyum. Dia  hairan bagaimana ibu bapa mereka sanggup membiarkan anak-anak itu berkeliaran bebas. Pintu lif terbuka di tingkat 8.  Tiga kanak-kanak itu mengucap bye-bye .  Dia melangkah longlai menuju ke rumah sewanya.   Dia...

எனக்குத் தெரியும் சாமிக்கும் தெரியும்

  சிறுகதை     எம். பிரபு   “ இதை உங்கம்மாகிட்ட சொல்லாதே. ” “ நாம இப்படி செய்யறது தப்பில்லையா? ”   கவிநயாவிற்கு தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி உண்டாகியது. யாரும் இதைப் பார்க்காமல் இருந்தால் நல்லது. அவர்கள் இருவரும் செய்ததை யாராவது பார்த்து, அதை தமிழ்ச்செல்வியின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தால், இதனால் அவர் அவளை அடித்தாரென்றால் அதற்கு முழு பொறுப்பு தான்தான் என்பதையும் எண்ணி பயந்தாள். பிறகு அவர்கள் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு பறிபோய்விடும். “ அவங்களுக்கு எப்படித் தெரியும்? அதான் யாரும் பார்க்கலயே? ” தமிழ்ச்செல்வியிடம் உள்ள அசட்டுத்தனமான அந்தத் தைரியத்தைக் கண்டு ஆச்சிரியமடைந்தாள் கவிநயா. இதைச் செய்ததினால் கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டாரா என்கிற கேள்வியும் கவிநயாவிற்கு எழுந்தது. “ அப்படி யாராவது பார்த்திருந்தாங்கன்னா? ” கவிநயா   ஆரம்பத்திலிருந்தே   அந்த மாரியம்மன் கோவில் சுவருக்குப் பின்னால் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினாள். சற்று தூரத்திலிருது மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் வருவதும் போவுதுமாக இருந்தன. அவர்கள் எல்லாம் கோவில்...