கட்டுரை எம். பிரபு நாம் இந்தப் பூமியில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலமே. இந்தக் குறுகிய காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். நாம், பல பரிமாணங்கள் எடுத்து இப்போதுள்ள மனிதர்களின் நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பலவித பரிமாணங்களில் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்த நம் முன்னோர்களின் தியாகத்தினால்தான் இன்று பல வசதிகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இன்பத்தை விட துன்பங்களையே அனுபவவித்தவர்கள் நம் முன்னோர். தங்களின் சந்தோஷத்தைத் தொலைத்து நமக்காக எல்லாவற்றையும் விட்டுச் சென்றுள்ளனர். முன்பு அவர்கள் அனுபவித்த துன்பத்தின் சிறு அளவுகூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம். இருப்பினும், தற்போது 24 மணி நேரமும் நாம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிரக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால், என்னதான் உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், மனிதர்கள் யாவரும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழித்ததாகச் சரித்திரமே கிடையாது. ஏழையோ, நடுத்தர வர்ககத்தாரோ அல்லது பெரும் பணம் ...