சிறுகதை எம். பிரபு “ இதை உங்கம்மாகிட்ட சொல்லாதே. ” “ நாம இப்படி செய்யறது தப்பில்லையா? ” கவிநயாவிற்கு தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி உண்டாகியது. யாரும் இதைப் பார்க்காமல் இருந்தால் நல்லது. அவர்கள் இருவரும் செய்ததை யாராவது பார்த்து, அதை தமிழ்ச்செல்வியின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தால், இதனால் அவர் அவளை அடித்தாரென்றால் அதற்கு முழு பொறுப்பு தான்தான் என்பதையும் எண்ணி பயந்தாள். பிறகு அவர்கள் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு பறிபோய்விடும். “ அவங்களுக்கு எப்படித் தெரியும்? அதான் யாரும் பார்க்கலயே? ” தமிழ்ச்செல்வியிடம் உள்ள அசட்டுத்தனமான அந்தத் தைரியத்தைக் கண்டு ஆச்சிரியமடைந்தாள் கவிநயா. இதைச் செய்ததினால் கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டாரா என்கிற கேள்வியும் கவிநயாவிற்கு எழுந்தது. “ அப்படி யாராவது பார்த்திருந்தாங்கன்னா? ” கவிநயா ஆரம்பத்திலிருந்தே அந்த மாரியம்மன் கோவில் சுவருக்குப் பின்னால் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினாள். சற்று தூரத்திலிருது மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் வருவதும் போவுதுமாக இருந்தன. அவர்கள் எல்லாம் கோவில்...