கட்டுரை எம். பிரபு 11 மற்றும் 12 ஜனவரி 2026 தொடங்கி எல்லா மாணவர்களும் மீண்டும் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள். அடுத்த ஆண்டில் பழையபடி ஜனவரி முதல் வாரத்திலேயே பள்ளிகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் நவம்பர் மாத நடுவிலேயே பள்ளி விடுமுறை விடப்பட்டு , டிசம்பர் இறுதி வரை அது தொடர்ந்தது. ஆனால் தற்போது பெருநாள் காலங்களில் அதிகப்படியான விடுமுறை வழங்கப்படுவதால் , இறுதி தவணை விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே , பெருநாள் கால விடுமுறைகளை குறைப்பது மிகவும் அவசியமாகிறது. முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது. ஹரி ராயா மற்றும் சீனப் பெருநாட்களுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை இருந்தது. இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வர வேண்டும். இந்த ஆண்டிலிருந்து நம் மாணவர்கள் 100% உருமாற்றம் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த காலச் சம்பவங்கள் பலவும் கசப்பான அனுபவங்களாக இருந்தன. அவை இனி தொடராமல் இருக்க பலவிதமான முன்முயற்சிகள் அவசியம். மாணவர்கள் முழு மனதோடு விரும்பிப் பள்ளிக்குச் செல்ல , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசாங்கமும் ம...