அனுபவம் பெந்தோங் லிடோ 1991 எம். பிரபு எப்போது நிழற்படம் 1826 ஆம் ஆண்டில் தோன்றி மக்களிடையே பிரசித்திப் பெற்றதோ, அதன் மீது உள்ள அதீத ஆர்வத்தால் படங்களைச் நகரச் செய்து பார்த்துவிட பலர் முயற்சியில் இ ற ங்கினர். அதன் பின் வெவ்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளால் நகரும் படங்கள் கருவிகளை உருவாக்கப்பட்டன. என்னதான் Thomas Alva Edison நகரும் படக்கேமராவைக் உருவாக்கியிருந்தாலும், டிசம்பர் 28, 1895 ஆம் ஆண்டு Auguste மற்றும் Louis Lumiere சகோதரர்கள்தான் பிரான்சில் முதன் முறையாக மக்களின் பார்வைக்கு அரங்கு அமைத்து திரைப் படங்களைத் திரையிட்டு காண்பித்தனர். அந்நாளில் அவர்கள் 10 குறும்படஙளைத் தயாரித்துத் திரையிட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 50 விநாடிகள் ஓடியது. இவ்வாறு ஆரம்பித்த சினிமா, இன்று எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்று பார்த்தால் மிகவும் மலைப்பாக உள்ளது. எந்த ஆண்டில், எந்தப் படத்தை நான் முதன் முறையாக ஒரு திரையரங்கில் அமர்ந்து பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் நிச்சயமாக எனது தாயா...