சிறுகதை எம். பிரபு தமிழ்ச்செல்விக்கு பிடிக்கவில்லை, எனக்கும் பிடிக்கவில்லை. பல மாதங்களாக போராடி வந்த நான், தோற்று விட்டேன். தோற்றுப் போனது அவர்கள் முன்னால் நானாக இருக்கலாம், ஆனால் என் உள்ளம் தோற்கவில்லை. என் உள்ளம் இன்னமும் போராடிக் கொண்டுதான் உள்ளது. அதற்கான சரியான தருணம் இதுவரையில் அமையவில்லை. இனியும் அமையுமா என்று எனக்கும் தெரியவில்லை. அமைந்தால் நல்லதே. “ நீங்க போங்க , நான் வரல, ” நேற்றிலிருந்து நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். “ நான் மட்டும் எப்படி போவது ? எல்லாரும் உன்னை விசாரிப்பாங்களே ? ” அவர் நல்ல உடை உடுத்திக் கிளம்ப ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார். “ உங்களுக்கு பிடிக்கும்னா போயிட்டு வாங்க , ஏன் என்னை கூப்பிடுறீங்க ? ” நான் குசினியில் கூட்டிக்கொண்டே கூறினேன். “ நம்மல க...