கட்டுரை       எம். பிரபு நாம் இந்தப் பூமியில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலமே.   இந்தக் குறுகிய காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். நாம், பல பரிமாணங்கள் எடுத்து இப்போதுள்ள மனிதர்களின்   நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பலவித பரிமாணங்களில் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்த நம் முன்னோர்களின் தியாகத்தினால்தான் இன்று பல வசதிகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இன்பத்தை விட துன்பங்களையே அனுபவவித்தவர்கள்  நம் முன்னோர். தங்களின் சந்தோஷத்தைத் தொலைத்து நமக்காக எல்லாவற்றையும் விட்டுச் சென்றுள்ளனர்.  முன்பு அவர்கள் அனுபவித்த துன்பத்தின் சிறு அளவுகூட நாம்  அனுபவித்திருக்க  மாட்டோம். இருப்பினும், தற்போது 24 மணி நேரமும் நாம் சந்தோஷமாக வாழ்ந்து  கொண்டிரக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால், என்னதான் உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், மனிதர்கள் யாவரும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழித்ததாகச்  சரித்திரமே கிடையாது. ஏழையோ, நடுத்தர வர்ககத்தாரோ அல்லது பெரும் பணம் ...
  சிறுகதை                            எம். பிரபு       ஆ வோங்கிற்கு மிகவும் சந்தோசம். வாயெல்லாம்   மஞ்ச ள்  நிற பற்களை காண்பித்து சிரித்துக்  கொண்டே  சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான். சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த ஆ மெங் ,  வோங் செய்யும்  சேட்டைகளை கண்டு கடுப்படைந்தான். “உன்னால சத்தம் போடாம சைக்கி ளை  ஓட்ட முடியாதா ,  வோங் ? ” “இன்று சைக்கிள் கிடைக்காதென்று நினைத்தேன். நல்ல வேளை ...” “நடந்தே வந்திருக்கலாம். இதெல்லாம் தேவையில்லாதது. பேசாமால் வாயை மூடிக்கொண்டு சைக்கிளை மிதி!” “என்னா ஆ மெங்,   நாம் எப்போதும் காட்டுக்குள் இருந்து பயந்து பயந்து சாகின்றோம். எப்போதாவதுதான் இந்த மாதிரி வாய்ப்பு. இப்போது சந்தோசமா பட்டணத்தை சுற்றிப் பார்த்துவிட்டு போவோமே.” “சுற்றிப் பார்க்கவா லீடர்  நம்மை பட்டணத்துக்கு போகச் சொன்னார் ?  பொருட்களை வாங்கிவிட்டு உடனே கிளம்பி விடுவோம். ” “அப்படியே அந்த சாலை ஓரத்தில் இந்தியர் ஒருவர் விற்கின்ற செண்டோலை குடித்துவிட்டுப் போவா...